தொலைபேசி மற்றும் தகவல்களை பாதுகாப்பதற்கு!!

           ஆம் நிகழ்கால வாழ்வில் தொலைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லையென்ற நிலைக்கு பலர் வந்து விட்டனர். சிலரால் தொலைபேசி இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க முடியாது. தொலைபேசியை வாழ்க்கையென பலர் அதனை கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் பலருக்கு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி தெரிவதில்லை! அதனை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதும் தெரிவதில்லை! அதனால் பிரச்சனைகள் வரும் என்பதையும் அவர்கள் அறிவதில்லை!

தொலைபேசி மற்றும் தகவல்களை பாதுகாப்பதற்கு!!


 தொலைபேசி அதாவது ஸ்மார்ட் போன் அதுவே பலருக்கு வாழ்க்கையாக உள்ளதால் பலரது ஸ்மார்ட்போனில் பலர் தமது முக்கியமான தகவல்களை சேமித்து வைக்கின்றனர். அவ்வாறு செய்பவர்களுக்கு ஸ்மார்ட் போனை பாதுகாப்பாக யாரும் தகவல்களைதிருடாத வழியில் பயன்படுத்துவது என்று தெரிவதில்லை. உங்கள் தொலைபேசியை பாதுகாக்க வேண்டுமா?  


         தொலைபேசியை மட்டுமல்லாது உங்கள் தகவல்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் உங்கள் தொலைபேசியை உங்களுக்கு நம்பிக்கை இல்லாதவர் யாரிடமும் கொடுக்காதீர்கள். அதனை எந்த சந்தர்ப்பத்திலும் செய்யாதீர்கள் முதலில் உங்கள் தொலைபேசி/ஸ்மார்ட் போனுக்கு பாதுகாப்பை அதிகரிக்க நல்ல பலமான பாஸ்வேர்டு(password) போடுங்கள். 


அதாவது நீங்கள் தெரிவு செய்யும் பாஸ்வேர்ட் இலக்கங்களாக மட்டும் இல்லாமல், எழுத்துக்கள் இலக்கங்கள் என்பன கலக்கப்பட்ட சேர்ந்த சொல்லாயோ பயன்படுத்துங்கள்.  அந்த சொல்லானது ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில பெரிய எழுத்துக்கள்,இலக்கங்கள், சில குறியீடுகள் சேர்ந்ததாக இருந்தால் இன்னும் நல்லது. அதாவது இவ்வாறு நான்கு  பண்புகள் சேர்ந்ததாக 

இருந்தால் கடவுச்சொல்லை இலகுவாக யாராலும் கண்டுபிடித்து விட இயலாது. 


ஆகையால் இவ்வாறான பாதுகாப்புடைய கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள் அதே நேரத்தில் சில ஸ்மார்ட்போனில் தனித்தனியாக ஒவ்வொரு 

செயலிகளுக்கும் கடவுச்சொல் இட்டு பாதுகாக்கும் வசதிகள் உள்ளன. அவ்வாறிருந்தால் முக்கியமான செயலிகளுக்கு கடவுச்சொல் இட்டு பயன்படுத்துங்கள். உங்கள் ஸ்மார்ட் போனை மற்றவர்களுக்கு கொடுத்தா கொடுத்தாலும் உங்கள் முக்கியமான தகவல்களை அவர்களால்  பார்க்க இயலாது.

 ஆகவே அதை பயன்படுத்துங்கள்.

தொலைபேசி மற்றும் தகவல்களை பாதுகாப்பதற்கு!!


புதிதாக  fingerprint மற்றும் face lock மற்றும் eye lock மூலம் பாதுகாப்பு செய்யும் முறைகளும் உள்ளன அவ்வாறான தொழில்நுட்பம் இருந்தால் அவற்றை உபயோகிப்பது இன்னும் சிறந்தது சிறந்தது.


 உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டால் உங்கள் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் அளிப்பதற்கு இயலும்.  அவ்வாறான பாதுகாப்பை வழங்க உங்கள் தொலைபேசி உடைய அதாவது உங்கள் தொலைபேசி 

  • ஆப்பிள் கம்பெனி உடையது என்றால் ஐ கிளவுட்(icloud) வசதி உள்ளது அதனால் உங்கள் தொலைந்த தொலைபேசியின் தகவல்களை அழித்து லாக் செய்ய முடியும்.

  •  அவ்வாறே android தொலைபேசி யாக இருந்தால் அதில்  கூகுள் அதனுடைய செயலியை நிறுவியுள்ளது. அதன் மூலம் உங்களுடைய மின்னஞ்சல் ஊடாக கடவுச்சொல் இட்டு அந்த தொலைபேசியின் தகவல்களை அழித்து லாக் செய்ய முடியும்.

  • அவ்வாறே பிளாக்பெர்ரி மற்றும் ஏனைய தொலைபேசிகளுக்கும் சில சில தொழில்நுட்பம் உள்ளன.

  •  அப்பிள் போன் ப்ளாக்பெர்ரி ஆகியன மிகவும் பாதுகாப்பானவை அதாவது android  போன்களுடன் ஒப்பிடுகையில் அவை இரண்டும் பாதுகாப்பானவை.

  •  அடுத்ததாக உங்களுக்கு மிகவும் தேவையான அல்லது முக்கியமான தகவல்களை தொலைபேசியில் சேமித்து வைப்பதை தவிர்க்கவும்.

  • அடுத்ததாக நீங்கள் செயலிகளை தரவிறக்கும் போது அதனுடைய  ரிவியு இனை பார்த்து தரவிறக்கம் செய்யுங்கள். ஏனென்றால் சில செயலிகள் அதாவது அப்ளிகேஷன் சில திருடர்களால் அதாவது தகவல் திருடர்களால் செய்யப்பட்டு விடப்பட்டதாக இருக்கலாம். அவ்வாறு இருக்கின்றன!

  •  அவைகளின் ஊடாக உங்களுடைய தொலைபேசியில் உள்ள போட்டோஸ், வீடியோஸ், மொபைல் நம்பர், கிரெடிட் கார்டு தகவல்கள், என்பதை உங்களை அறியாமல்  எடுத்துக் கொள்ள இயலும். அதுமட்டுமல்லாது நேரடியாக உங்களுடைய கேமராவையும் பயன்படுத்த இயலும். ஆனால் உங்களுக்குத் தெரியாது. ஆகவே நீங்கள் சில இணையப் பக்கங்களுக்கு போகும் போதும் சில செயலிகளை உபயோகிக்கும் போதும் மிகவும் கவனமாக இருங்கள்.


அவ்வாறு அவற்றை உபயோகிக்கும் போது உங்களுக்கு சில அளவில் அழைப்புகள் வரும் (alert வரும்) அதனை கவனமாக பார்த்து பட்டனை கிளிக் பண்ணவும்.


அந்த alert  இல் தான் உங்களுடைய தொலைபேசி உடைய சில பகுதிகளை உபயோகிப்பதற்கு உபயோகிப்பதற்கு அல்லது உங்களுடைய கேலரியை பயன்படுத்தவும் அனுமதி கோரப்படும். ஆகவே alert வரும்போது கவனமாக அதிலுள்ளவற்றை படித்து பட்டனை அழுத்துங்கள்.


 அனுமதியை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானித்து செயற்படுங்கள். இவ்வாறு செய்வதன் ஊடாக ஓரளவிற்கு உங்கள் தொலைபேசியையும் தொலைபேசியில் உள்ள தகவல்களையும் பாதுகாத்துக் கொள்ள இயலும்.


 அடுத்து hard reset என்னும் ஒரு தொழில் நுட்பம் உள்ளது அது உங்கள் தொலைபேசியுடன் அதாவது ஸ்மார்ட்போனுடன் இதுக்கும் உங்கள் போனை  வேறொருவருக்கு உபயோகிக்க கொடுப்பது ஆயின் hard reset செய்துவிட்டு கொடுக்கவும் இதன் மூலம் ஓரளவிற்கு உங்களுடைய தகவல்களை பாதுகாத்துக் கொள்ள இயலும் 


நன்றி.


Hard reset செய்யும் முறை

தொலைந்த தொலைபேசியின்  தரவுகளை எவ்வாறு அழிப்பது(ANDROID) 

தொலைந்த தொலைபேசியின்  தரவுகளை எவ்வாறு அழிப்பது(IPHONE)

Tags :- smartphones, smartphone's are in danger, how to secure smartphones,smartphone data protection, stay safe from smartphone data loss, iphone security, samsung security,